2011-08-02 16:16:54

இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்!- பகுப்பாய்வு அறிக்கையில் கோத்தபாய தெரிவிப்பு


ஆக 02, 2011. இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான். விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொல்லப்படாமல் போர் ஒன்றை நடத்த முடியாது'' என்று கூறிய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, போரில் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கணக்கை வெளியிடவில்லை.
ஆனால் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.நாவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள் என்று மனித உரிமை அமைப்புக்களும் தெரிவிக்கின்றன.
வன்னியில் எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என்று இதுவரை தெரிவித்து வந்த இலங்கை அரசு தற்போது முதல் தடவையாக போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.