2011-08-01 16:16:16

பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக கிறிஸ்தவக் குருக்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து உழைக்க அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர்


ஆக.01, 2011. இந்தோனேசியாவில் தாயக் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக கிறிஸ்தவக் குருக்களும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டிய தேவை உள்ளது என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டின் மேற்கு கலிமான்டன் ஆளுநர்.
ஆளுனர் மாளிகையில் இந்தோனேசியாவின் குருக்களுள் ஏறத்தாழ் 110 பேருடன் இடம்பெற்ற விருந்தில் உரை நிகழ்த்திய ஆளுநர் கொர்னேலிஸ், தாயக் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் நல மேம்பாட்டிற்காக உழைப்பதுடன் அவர்களுக்கான விழிப்புணர்வுச் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வருங்காலத்தை மனதிற்கொண்டு இப்பழங்குடியினர் தங்கள் குழந்தைகளைக் கல்வி நிலையங்களுக்கு அனுப்ப உதவும் வகையில் குருக்களின் மறையுரைகள் விழிப்புணர்வை ஊட்டுவதாக இருக்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் ஆளுநர் கொர்னேலிஸ்.







All the contents on this site are copyrighted ©.