2011-07-30 14:04:22

நிக்கராகுவாவில் சட்டம் ஒழுங்கு இல்லை - ஆயர் Sandigo Giron கவலை


ஜூலை 30,2011. நிக்கராகுவா நாட்டில் அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா மீண்டும் தேர்தலில் நிற்கும் வழிகளைத் தேடுவதாக அறிவித்திருப்பது, அந்நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதைக் காட்டுகிறது என்று அந்நாட்டு ஆயர் Socrates Rene Sandigo Giron தெரிவித்தார்.
மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில் மக்கள் மத்தியில் பரவலாக அவநம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவித்த ஆயர் Sandigo Giron, அண்மை மாதங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்த கவலையையும் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு அரசு நிறுவனங்களில் நேர்மையின்மையும் ஒளிவுமறைவும் தெரிகின்றன எனவும் பிரிவினைவாதச் சக்திகள் அரசு அமைப்பையும் அரசு நிறுவனங்களையும் மிகவும் தங்கள் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகின்றன எனவும் நிக்கராகுவா ஆயர் பேரவைச் செயலரான ஆயர் Sandigo Giron கூறினார்.
நிக்கராகுவா நாட்டில் வருகிற நவம்பர் 5ம் தேதி பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.