2011-07-29 15:37:25

யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள்


ஜூலை 29,2011. புருண்டி, மெக்சிகோ, காங்கோ சனநாயகக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய பகுதிகளில் இடம் பெறும் எழுத்தறிவுப் புகட்டும் திட்டங்களுக்கு இவ்வாண்டு யுனெஸ்கோவின் அனைத்துலக எழுத்தறிவு விருதுகள் கிடைத்துள்ளன.
வருகிற செப்டம்பரில் புதுடெல்லியில் சிறப்பிக்கப்படும் அனைத்துலக எழுத்தறிவு நாளன்று இவ்விருதுகள் வழங்கப்படும் என்று யுனெஸ்கோ அறிவித்தது.
இவ்விருதுகள் ஒவ்வொன்றும் இருபதாயிரம் டாலரைக் கொண்டுள்ளது.
இவ்விருதைப் பெறும் அமெரிக்க ஐக்கிய நாட்டை மையமாகக் கொண்ட Room to Read அமைப்பு, இந்தியா, இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், கம்போடியா, லாவோஸ், வியட்நாம், ஜாம்பியா, தென்னாப்ரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் உள்ளூர் மொழிகள் மூலம் பாலியல் சமத்துவம் மற்றும் கல்வியறிவை வளர்த்து வருகிறது.







All the contents on this site are copyrighted ©.