2011-07-29 15:38:40

பட்டினியால் ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் சொமாலியாவில் உயிரிழக்கின்றனர்


ஜூலை 29,2011. ஆப்ரிக்க நாடான சொமாலியாவில் தலைவிரித்தாடும் பஞ்சத்தால் தினமும் 250 குழந்தைகள் வீதம் உயிரிழக்கின்றனர்' என்று கூறப்படுகின்றது.
இந்நாட்டில் பல ஆண்டுகளாக காணப்படும் பசி பட்டினி பஞ்சத்தால் அதன் தெற்குப் பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி' என அறிவித்துள்ளது ஐ.நா.
இப்பகுதியில் ஒவ்வோர் ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது என்றும், சொமாலியா மட்டுமல்லாமல், எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலுள்ள மக்கள், நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்றும் ஐ.நா.கூறியது.
சொமாலியா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 இலட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.







All the contents on this site are copyrighted ©.