2011-07-28 15:22:58

தென்னாபிரிக்காவால் மட்டுமே இலங்கையின் நல்லிணக்கத்திற்கு உதவ முடியும்! - லூயிஸ் ஆர்பர்


ஜூலை 28, 2011. நல்லிணக்கம் தொடர்பாக தென்னாப்ரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாப்ரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகையில் கருத்து தெரிவித்த லூயிஸ் ஆர்பர்,கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல ஆண்டுகளான உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்தையும் அர்ப்பணிப்புடன் முன்நகர்த்த இயலாது என்பதை எந்த நாடுகளையும் விட தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ள நிலையில் அந்தப் பாடத்தை இலங்கை கற்றுக்கொள்ள முடியும் என்றார்.
விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடித்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், யுத்தத்தின் பின்னரான அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும் இனப் பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகின்றன எனக் கூறிய அவர், பல்வேறு சவால்களுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசானது, சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் குறைகூறினார்.








All the contents on this site are copyrighted ©.