2011-07-28 15:38:22

ஜூலை 29 வாழ்ந்தவர் வழியில்....


J.R.D. டாடா எனப்படும் ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (Jehangir Ratanji Dadabhoy Tata) என்பவர் இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். J.R.D. டாட்டா, 1904ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி பிரான்சு நாட்டின் பாரிசில் பிறந்தார். இவரது தாய் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவராதலால் இவர் தனது சிறுவயதின் பெரும் பகுதியை பிரான்சிலேயே செலவழித்தார். 1929, பிப்ரவரி 10ம் தேதி இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார். J.R.D. டாட்டா, 1932ல் 'Tata Airlines' என்ற பெயரில் இந்தியாவின் முதல் வணிக விமானப் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்கினார். அது 1946ல் Air India என்ற பெயரில் இயங்கியது. இது தற்போது இந்தியாவின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமாக அமைந்துள்ளது. 1925ல், Tata & Sons என்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலைக் குழுமத்தில் ஊதியம் பெறாத பணியில் சேர்ந்தார். 1938இல், தனது 34 வது வயதில் Tata & Sons குழுமத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தலைமையில் டாட்டா குழுமத்தின் சொத்துக்கள், 10 கோடி டாலர் முதல் 500 கோடிக்கு அதிகமான டாலர் வரை வளர்ந்தது. இவரது வழிகாட்டுதலில் 1941ல் பம்பாயில் டாட்டா நினைவு புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் புற்றுநோய்க்கெனத் தொடங்கப்பட்ட முதல் மையமாகும். 1948ல், இந்தியாவின் முதல் சர்வதேச விமானச் சேவையான Air India விமானப் போக்குவரத்தையும் ஆரம்பித்தார். J.R.Dடாட்டா, தொழில்துறையில் ஒழுக்கநெறிகளைக் கடைபிடித்தவர். அரசியல்வாதிகளிடமிருந்து இலஞ்சம் வாங்கவும் கறுப்புப்பணச் சந்தையைப் பயன்படுத்தவும் மறுத்தவர். J.R.D. டாட்டா, 1954 இல் ப்ரெஞ்ச் அரசின் Legion of Honour விருதும், 1957இல் பத்ம விபூசண் விருதும் 1992இல் பாரத் ரத்னா விருதும் பெற்றார். இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் இறந்தார்.








All the contents on this site are copyrighted ©.