2011-07-28 15:25:24

காம்பியா நாட்டில் பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக மறைப்பணியாளர்கள் கவலை


ஜூலை 28, 2011. காம்பியா நாட்டில் தேர்தலுக்கு முன்னான அடக்குமுறை நடவடிக்கைகளின் விளைவாக பதட்டநிலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டில் பணிபுரியும் மறைப்பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
நவம்பர் தேர்தலை நோக்கி நாடுச் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல சமூக அமைப்புகளின் அங்கத்தினர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வருவது குறித்து கவலையை வெளியிட்ட மறைப்பணியாளர்கள், நாட்டின் மனித உரிமை மீறல்கள் குறித்து தங்கள் குரலை எழுப்பும் எவரின் வாழ்வும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
காம்பியாவில் வேலைவாய்ப்பின்மைகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றபோதிலும், வட ஆப்ரிக்க நாடுகளைப்போல் இங்கு மக்கள் எழுச்சி இடம்பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்ற அவர்கள், அரசின் அடக்குமுறைகளையும் மக்களின் அமைதி இயல்புகளையும் அதற்கு காரணமாகக் காட்டியுள்ளனர்.
14 இலட்சம் மக்கள்தொகையைக் கொண்ட காம்பியாவில் 98 விழுக்காட்டினர் இசுலாமியர்.








All the contents on this site are copyrighted ©.