2011-07-27 16:31:26

மொகதிஷூவில் உதவி கேட்டு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு – ஐ.நா.


ஜூலை27,2011. சொமாலியாவில் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் கடந்த இரண்டு மாதங்களாக உணவு, தண்ணீர், குடியிருப்பு மற்றும்பிற வசதிகளைத் தேடி அலைந்த பின்னர் தலைநகர் மொகதிஷூ வந்துள்ளனர் என்று ஐ.நா அகதிகள் அமைப்பு இச்செவ்வாயன்று அறிவித்தது.
ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வீதம் இவர்கள் வந்து கொண்டிருப்பதால் இவ்வெண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று UNHCR பேச்சாளர் விவியன் தான் ஜெனீவாவில் தெரிவித்தார்.
அண்மை மாதங்களில் கென்ய எல்லையிலுள்ள ததாப் முகாம்களில் சொமாலிய அகதிகளின் எண்ணிக்கை 3,80,000 த்தை எட்டியுள்ளது. தினமும் சுமார் 1300 பேர் வீதம் அங்கு வருவதால் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று தான் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.