2011-07-27 16:29:32

நைஜீரியாவின் வடகிழக்கில் சகிக்க முடியாத வன்முறைச்சூழல் நிலவுகிறது - Maiduguri ஆயர்


ஜூலை27,2011. ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் தாக்குதல்கள் இடம் பெறும் நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் காணப்படும் வன்முறைச்சூழல், சகிக்க முடியாததாக இருக்கின்றது என்று அந்நாட்டு Maiduguri ஆயர் Oliver Dashe Doeme தெரிவித்தார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை JTF என்ற பிரிவின் படைவீரர்கள் மக்கள் கூட்டத்தின்மீது கண்மூடித்தனமாகச் சுட்டதில் குறைந்தது 23 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கழகம் வெளியிட்ட செய்தியையொட்டி இவ்வாறு ஆயர் கூறினார்.
தினமும் தாக்குதல்கள் நடக்கின்றன, ஆனால் இதற்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்படவில்லை, எனவே இராணுவத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என்றும் Maiduguri ஆயர் கூறினார்.
ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகத்தின் கூற்றுப்படி, இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து 250 பேர் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.