2011-07-25 16:43:25

மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்


ஜூலை 25, 2011. இந்தியாவில் "எய்ட்ஸ்' போன்ற ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் அபாயம் கொண்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில், பல மருத்துவமனைகள் மெத்தனமாக உள்ளதால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது என நல ஆர்வலர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சையில் வெளியாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற, 1998ம் ஆண்டில் விதிமுறைகளை உருவாக்கி, இந்திய மத்திய அரசு, தனிச் சட்டம் இயற்றி, இந்த நடைமுறைகள் அனைத்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பல மருத்துவமனைகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2,252 பெரிய மருத்துவமனைகளும், 317 அரசு மருத்துவமனைகளும், சிறிய மருத்துவமனைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன.
'சென்னையில் மருத்துவக் கழிவு அப்புறப்படுத்தும் திட்டத்தின் கீழ், 258 மருத்துவமனைகள்தான் பதிவு செய்துள்ளன. ஆனால், 5,000க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் இதில் பதிவு செய்யவில்லை' என மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.