2011-07-25 16:41:28

பருவநிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை


ஜூலை 25, 2011. பருவ நிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என சுவிஸ் நாட்டின் ஆய்வு நிபுணர் குர்ட் ஸ்பில்மான் எச்சரித்துள்ளார்.
கடந்த வார துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்ட சூரிச் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் குர்ட் ஸ்பில்மான், பருநிலை மாற்ற நிகழ்வால் நாடுகளுக்கு இடையே உடனடி மோதலை ஏற்படுத்தாதிருப்பினும் இந்த நிலை நீடிக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கும் என எச்சரித்தார். பருவநிலை மாற்ற நிகழ்வால் தற்போது ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் சில பகுதிகளில் மோதல்கள், பதட்டம், நெருக்கடி ஏற்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.