2011-07-25 16:40:17

இலங்கையின் வடக்கில் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு


ஜூலை 25, 2011. வட இலங்கையில் குழந்தைகள் கைவிடப்படல் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. குறிப்பாக வன்னியிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பகுதிகளில் நான்கு குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கைவிடப்பட்ட நான்கு குழந்தைகளும் துணியால் சுற்றப்பட்டு மத்திய வவுனியா பேருந்து நிலையத்தில் கிடத்தப்பட்டிருந்தன.
போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள வறுமை, குடும்பத் தலைவர்கள் இல்லாமை போன்றவையே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.