2011-07-23 15:56:38

புனித பூமியின் சமயத் தலைவர்கள் உலக வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு இசைவு


ஜூலை 23,2011. உலக வெப்பநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு புனித பூமியின் சமயத் தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்தவ, யூத மற்றும் இசுலாம் மதங்களின் முக்கிய தலைவர்கள் எருசலேமில், இத்திங்களன்று இந்நடவடிக்கையைத் தொடங்கவுள்ளனர்.
“வெப்பநிலை மாற்றம் குறித்த புனித பூமி அறிக்கை” எனும் தலைப்பில் இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எருசலேமிலுள்ள முக்கிய சமயத் தலைவர்கள் ஒரு விவகாரம் குறித்து ஒத்திணங்கி வருவது ஒரு புதுமையே என்று செய்திக் குறிப்புகள் கூறுகின்றன







All the contents on this site are copyrighted ©.