2011-07-23 16:04:24

இரயில் விபத்துகளை தடுக்க 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயாரிப்பு


ஜூலை 23,2011. இந்தியாவில் இரயில் விபத்துகளைத் தடுக்கவும், இரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்கவும், எழுபதாயிரம் கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இரயில்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தடுக்கும் வகையிலான தொழில் நுட்ப கருவிகளைப் பொருத்துவது, எச்சரிக்கைக் கருவியைத் தயாரிப்பது, ஆளற்ற இரயில்வே மற்றும் சாலைச் சந்திப்புக்களை ஒழிப்பது, போக்குவரத்து எச்சரிக்கை விளக்குகளின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, இரயில் பாதுகாப்புத் திட்டங்களுக்காக, மிகக் குறைந்த அளவில்தான் செலவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இரயில்வே துறையில், பாதுகாப்புப் பிரிவில் மட்டும், ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
வரும் 2015க்குள், ஆளற்ற இரயில்வே "கிராசிங்'குளை ஒழிக்க வேண்டுமானால், அதற்கு 5,000 கோடி ரூபாய் தேவைப்படும் எனப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.







All the contents on this site are copyrighted ©.