2011-07-21 16:21:23

பானம நாட்டின் வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்கு ஆயர்கள் பாராட்டு


ஜூலை 21, 2011. அமெரிக்க நாடுகளின் அவைக் கூட்டத்தில் பானமா நாட்டுப் பிரதிநிதிகள், வாழ்வுக்கு ஆதரவான நடவடிக்கைகளை வலியுறுத்தியது குறித்து தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளனர் பானம ஆயர்கள்.
குடும்பங்கள் பதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க நாடுகளின் கூட்டத்தில் பானம அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்தியது, அனைத்து நாடுகளுக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்றனர் தலத்திருச்சபை அதிகாரிகள்.
குடும்பத்தைப் பாதுகாப்பது என்பது மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கு ஒப்பாகும் என்ற ஆயர்கள், வாழ்வின் பாதுகாப்பிற்கானப் பானம அரசின் பரிந்துரைகளுக்கு அனைத்து அமெரிக்க நாடுகளும் ஆதரவு அளித்துள்ளது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டனர்.








All the contents on this site are copyrighted ©.