2011-07-21 16:17:16

உலக இளைஞர் தினக் கொண்டாட்டம் வாழ்வையே மாற்றியமைக்கும் ஓர் அனுபவம்


ஜூலை 21, 2011. உலக இளைஞர் தினக் கொண்டாட்டங்கள் என்பது வாழ்வையே மாற்றியமைக்கும் ஓர் அனுபவம் என இளையோர் கருதுவதாக அண்மையில் உலகம் முழுவதும் இளையோரிடம் எடுக்கப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.
ஆகஸ்டில் இஸ்பெயினின் மத்ரித்தில் திருத்தந்தையுடன் இடம்பெற உள்ள இளையோர் தினக்கொண்டாட்டங்கள் குறித்து உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த 1800 இளையோரிடம் GAD என்ற இஸ்பானிய மையம் நடத்திய ஆய்வில், 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் இதனை ஒரு வாழ்வு மாற்ற நடவடிக்கையாக நோக்குவதாகத் தெரிய வந்துள்ளது.
இளையோர் தினக் கொண்டாட்டங்களை 93 விழுக்காட்டினர் 'புதிய மாற்றத்திற்கான ஓர் அனுபவமாக' நோக்குவதாகவும், 92 விழுக்காட்டினர் இதனை இயேசுவின் நற்செய்தியை பரப்புவதற்கான ஒரு வாய்ப்பாகக் காண்பதாகவும், 90 விழுக்காட்டினர் திருச்சபைக்கான ஓர் அர்ப்பணமாகவும், 90 விழுக்காட்டினர் தங்களின் ஆன்மீக ஏக்கத்தை நிறைவு செய்வதற்கான ஒரு சந்திப்பாகவும் நோக்குவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இயேசு கிறிஸ்து மீதான விசுவாசம், மற்றவர்களை மன்னிக்கவும், ஏழைகளுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கவும் உதவுவதாக இந்த ஆய்வில் பங்குபெற்ற இளையோர் தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.