2011-07-16 15:26:02

தென்னாப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் வத்திக்கான் அமைப்பு முன்னணி


ஜூலை 16,2011. தென்னாப்ரிக்காவில் எய்ட்ஸ் நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் வத்திக்கான் அமைப்பு முன்னணியில் இருப்பதாகத் திருப்பீட நலவாழ்வு அவைச் செயலர் பேரருட்திரு Jean-Marie Mupendawatu தெரிவித்தார்.
2004ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்ட நல்ல சமாரித்தன் அமைப்பு, எய்ட்ஸ் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னணியில் இருப்பதாக, L’Osservatore Romano வத்திக்கான் தினத்தாளுக்கு அளித்த பேட்டியில் விளக்கினார் பேரருட்திரு Mupendawatu.
எய்ட்ஸ் நோய்க் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை இலவசமாக வழங்குவதே இந்த வத்திக்கான் அமைப்பின் நோக்கம் எனத் தெரிவித்த பேரருட்திரு Mupendawatu, இதனால் எய்ட்ஸ் நோயாளிகளின் ஆயுட்காலம் 11 ஆண்டுகளிலிருந்து 22 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்றது என்ற ஐ.நா. அதிகாரிகளின் கூற்றையும் தெரியப்படுத்தினார்.
2010ம் ஆண்டின் இறுதியில் உலகில் 3 கோடியே 40 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 5 விழுக்காட்டினரே போதுமான உதவிகளைப் பெற்றனர்.
2015க்குள் இதனால் தாக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாய்க் குறைப்பதற்கு உலக நலவாழ்வு நிறுவனம் முயற்சித்து வருகிறது







All the contents on this site are copyrighted ©.