2011-07-16 15:20:19

சீனாவில் திருத்தந்தையின் ஒப்புதலின்றி நடத்தப்படும் ஆயர் திருநிலைப்பாடுகள் குறித்து திருத்தந்தை கவலை - திருப்பீடப் பேச்சாளர்


ஜூலை 16,2011. சீனாவில் திருத்தந்தையின் ஒப்புதலின்றி நடத்தப்படும் ஆயர் திருநிலைப்பாடுகள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மிகவும் கவலையும் அதேசமயம் சீனத் திருச்சபை மீது கரிசனையும் கொண்டுள்ளார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சீனாவில் அருட்பணி Joseph Huang Bingzhang இவ்வியாழனன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டது, “திருச்சபையின் ஒன்றிப்புக்கு ஊறுவிளைவிக்கின்றது” என்று அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார்.
சீனாவில் திருத்தந்தைக்கு விசுவாசமாக இருக்கும் பல ஆயர்கள், இவ்வியாழனன்று நடைபெற்ற ஆயர் திருநிலைப்பாட்டில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என்று வத்திக்கான் குறிப்பிட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூன் 29ம் தேதி இடம் பெற்ற ஆயர் திருநிலைப்பாடு குறித்து வத்திக்கான் வெளியிட்ட அறிக்கை பற்றிக் குறிப்பிட்ட அருள்தந்தை லொம்பார்தி, இது திருத்தந்தையின் ஒப்புதலின்றி நடத்தப்பட்டதால் சட்டத்திற்குப் புறம்பானது, எனவே அந்த ஆயருக்கு அந்தக் கத்தோலிக்க மறைமாவட்ட சமூகத்தை நிர்வாகம் செய்வதற்கு அதிகாரம் கிடையாது, திருப்பீடமும் அவரை அம்மறைமாவட்ட ஆயராக அங்கீகரிக்கவில்லை என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்







All the contents on this site are copyrighted ©.