2011-07-15 16:07:56

இராணுவ மையத்தில் அணு ஆயுதக் குவிப்பு: ஜெர்மனி அரசு மீது சமூக ஆர்வலர் வழக்கு


ஜூலை15,2011. மேற்கு ஜெர்மனியில் உள்ள இராணுவ மையத்தில் அதிக அளவு அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டு உள்ளன என்று சொல்லி இந்த அணு ஆயுதங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இவ்வியாழனன்று நடைபெற்றது. ரைனே லேண்ட் பாலடினேட் இராணுவ மையத்தில் ஏறக்குறைய இருபது அணு வெடி குண்டுகள் உள்ளன என்று வழக்குத் தொடர்ந்த அமைதி ஆர்வலர் எல்க் கோலர் அரசின் மீது குற்றம் சாட்டினார்.
இப்படி அணு ஆயுதங்களைக் குவிப்பது ஜெர்மனியின் அடிப்படைச் சட்டத்திற்கு எதிரானது என அணு எதிர்ப்பு ஆர்வலரான எல்க் கோலர் மேலும் தெரிவித்தார்.
ஜெர்மனி அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ள கோலர் ஓய்வு பெற்ற மருந்தாளுனர் ஆவார். அவர் கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி பெடரல் அரசு மீது வழக்கு தொடர்ந்தார். நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் யாருடையதாக இருந்தாலும் உடனடியாக அகற்ற வேண்டும் என அவர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.