2011-07-14 16:06:19

மனித மாண்பு குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதே நெருக்கடிகள் பிறப்பதற்கு காரணமாகின்றது


ஜூலை14,2011. உலகின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டுமெனில், உபகரணங்கள் அல்ல மாறாக உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் மாறவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் வத்திக்கான் வங்கியின் இயக்குனர் கோத்தி தெதெஸ்கி.
திருப்பீடத்திற்கான இத்தாலிய தூதரகத்தில் 'பொருளாதார நெருக்கடியின் விளைவுகள்' என்ற தலைப்பில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய தெதெஸ்கி, பொருளாதாரம் என்பது ஓர் உபகரணமே, அந்த உபகரணத்தை தவறாகப் பயன்படுத்துவது நாமே என உரைத்ததுடன், மனித வாழ்வு மற்றும் மாண்பு சரியாக மதிக்கப்படாமையே நெருக்கடிகளுக்கான மூல காரணம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தையின் 'Humane Vitae' என்ற ஏட்டிலிருந்து உதாரணங்களை முன்வைத்த வத்திக்கான் வங்கி இயக்குனர், மனித மாண்பு குறித்த விழிப்புணர்வு குறைந்து வருவதே நெருக்கடிகள் பிறப்பதற்கு காரணமாகின்றது என்றார்.







All the contents on this site are copyrighted ©.