2011-07-14 16:08:52

சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைப் பொறுப்புடைய குடிமக்களாக மாற்ற அழைக்கின்றனர் ஆயர்கள்


ஜூலை 14,2011. குற்றவாளிகளைப் பொறுப்புடைய குடிமக்களாக மாற்றி அவர்களையும் சமூக வாழ்வின் அங்கமாக்கும் விதத்தில் சிறைத்தண்டனைக்கு மாற்றாக ஒன்று கண்டுபிடிக்கப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள்.
ஆஸ்திரேலியாவின் சிறைகள் மற்றும் நீதி அமைப்பு குறித்து சுற்றறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ள அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஃபிலிப் வில்சன், பசிக்கு உணவும், ஆடையற்றோருக்கு உடையும், அந்நியருக்கு வரவேற்பும், நோயுற்றோருக்கு கவனிப்பும் மட்டும் நம் கடமையல்ல, சிறையிலிருப்போரைச் சென்று சந்திப்பதும் நம்மிடம் எதிர்பார்க்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.
சிறைத்தண்டனை என்பதை இறுதிக்கட்ட தண்டனை முறையாக வைத்துக்கொண்டு அதற்கு மாற்றாக ஒன்றைக் கைகொண்டு அதன் வழி குற்றவாளிகளை பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்ற முனையவேண்டும் என்ற அழைப்பையும் அந்த சுற்றுமடலில் முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலிய பேராயர் வில்சன்.








All the contents on this site are copyrighted ©.