2011-07-14 16:09:40

கத்தோலிக்கக் கோவில் கட்டுவதற்கு அனுமதி தர மறுத்துள்ளது இலங்கை அரசு


ஜூலை 14,2011. இலங்கையின் குர்னேகல மறைமாவட்டத்தில் ஒரு புதிய கோவில் கட்டுவதற்கு அனுமதி தர மறுத்துள்ளது அந்நாட்டு அரசு.
Hendiyagala எனுமிடத்தில் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கு ஆயர் ஹரல்டு ஆன்டனி பெரேரா எடுத்த முயற்சிகளுக்கு அப்பகுதியின் புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அதைக் காரணமாகக் காட்டி அரசும் அனுமதி தர மறுத்துள்ளது.
அப்பகுதியின் 100க்கும் மேற்பட்ட கத்தோலிக்கக் குடும்பங்களுக்கான வழிபாட்டுத்தலமாக 1997ம் ஆண்டு கட்டப்பட்ட தற்காலிக கோவில் சில புத்தமதத் தீவிரவாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது புதிய கோவில் கட்டுவதற்கென முன்வைக்கப்பட்ட அனுமதி அரசால் மறுக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்கர்கள் புத்த மதத்தினரை மதமாற்ற முயல்வார்கள் என்ற காரணத்தைக்காட்டி, கத்தோலிக்க கோவில் கட்டுவதற்கு புத்த மதத்தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.