2011-07-14 16:11:30

கடல் தாவரத்திலிருந்து உப்பு தயாரித்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை


ஜூலை 14,2011. உப்பினால் விளையும் உடல் பாதிப்புகளைத் தவிர்க்க, அதற்கான மாற்றுப்பொருளைக் கண்டுபிடித்துள்ளனர் இங்கிலாந்தின் ஷெபீல்ட் ஹாலம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு, வலிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் நிலையில், இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க, உப்புக்கான மாற்றுப் பொருளைக் கடல் தாவரத்தில் இருந்து தயாரித்துள்ளனர் இவர்கள்.
உடலுக்குப் பாதிப்புகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத இந்தத் தாவர உப்பு, உடல் பருமனைக் குறைக்கவும் பயன்படுத்தப்படலாம் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள், இது இறுதிகட்ட ஒப்புதலுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.