2011-07-12 16:30:01

வீணாகும் 60 சதவீத உணவுப் பொருள் : மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல்


ஜூலை12,2011. இந்தியாவில் பழம், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பதப்படுத்தாததால், 60 சதவீதம் வரை வீணாகிறது என மத்திய வர்த்தக அமைச்சகத்தின் அதிகாரி என்.சி. சாகா தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய சாகா, உணவுப் பொருட்களை பதப்படுத்துவதால் உணவுப் பஞ்சத்தையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும். உணவுப் பொருட்களுக்கான முறையான பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாததால், 60 சதவீதம் வரை வீணாகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் ஆண்டு தோறும் இழப்பை சந்தித்து வருகிறது எனக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.