2011-07-12 16:28:27

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் குழந்தைத் திருமணம் : யுனிசெப்


ஜூலை12,2011. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் 42 விழுக்காடாக இருக்கும் நிலையில், தாய், சேய் மரணம் அதிகளவில் நடப்பதாக, யுனிசெப் நிறுவன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அதிகளவு குழந்தைத் திருமணங்கள் நடக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் யுனிசெப் நிறுவனமும் இணைந்து, குழந்தை நேய கிராமத் திட்டத்தை துவக்கி, நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைத் திருமணத்தால், பெண்களுக்கு, 60 விழுக்காடு இரத்த சோகை நோய், மகப்பேறு மரணம், குழந்தை பிறப்பில் சிக்கல், குறையுடன் குழந்தை பிறப்பு, கர்ப்பப்பை வளர்ச்சியின்மை ஆகியவை ஏற்படுகிறது என்ற யுனிசெப் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், குழந்தைத் திருமணம் செய்பவர்கள், மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனையும், ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.