2011-07-11 17:01:15

வருமான ஏற்றத்தாழ்வு இந்தியாவில் மிக அதிகம்


ஜூலை11,2011. இந்தியாவில் ஏழை, பணக்காரர்களின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு மிக அதிக அளவில் இருப்பதாக தேசிய மாதிரி ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராம மக்களின் மாதாந்திர சராசரி செலவு 1053 ரூபாயாக உள்ள நிலையில், நகரங்களில் இது 1,984 ரூபாயாக உள்ளது. இந்தியர்களின் வருமானம் மற்றும் செலவிடும் திறன் பற்றி தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 66வது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
2009-2010 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப் பட்டுள்ள அந்த ஆய்வில் மாதாந்திர தனிநபர் சராசரி செலவு கிராமங்களைவிட நகரங்களில் 88 விழுக்காடு அதிகமாக உள்ளது. அதாவது, கிராமங்களில் மாதாந்திர தனி நபர் சராசரி செலவு 1,053 ரூபாயாக உள்ள நிலையில், நகரங்களில் இது 1984 ரூபாயாக உள்ளது. இதில் பெரும்பகுதி உணவுக்காக செலவிடப்படுகிறது. கிராம மக்கள் மொத்த செலவில் 57 விழுக்காட்டையும், நகரவாசிகள் 44 விழுக்காட்டையும் உணவுக்காக செலவிடுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.