2011-07-09 15:53:42

பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றும் அறுவைசிகிச்சைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்


ஜூலை09,2011. இந்தியாவில் பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றும் மிகக் கொடுமையான அறுவைசிகிச்சை நடவடிக்கையை இந்திய ஆயர்கள் வன்மையாகக் கண்டிப்பதாக இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையச் செயலர் அருட்பணி சார்லஸ் இருதயம் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தைகளை விரும்பும் பெற்றோரின் வேண்டுகோளின்பேரில் பெண் குழந்தைகளின் பாலினத்தை மாற்றுவதற்கு மருத்துவர்கள் அறுவைசிகிச்சை செய்வது குறித்து ஃபீதெஸ் வத்திக்கான் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அருட்பணி இருதயம் இவ்வாறு கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் இன்டோர் நகரில் ஒரு வயதுக்குட்பட்ட 300 பெண் குழந்தைகளுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநில அரசும் இந்நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணையை மேற்கொண்டுள்ளதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த ஒவ்வோர் அறுவை சிகிச்சைக்கும் சுமார் 3200 டாலர் செலவாகின்றது. இந்த வன்செயலுக்கு, புதுடெல்லி, மும்பை போன்ற மாநகரங்களைச் சேர்ந்தோர் இன்டோரைத் தேர்வு செய்கின்றனர் என்றும் ஊடகச் செய்தி கூறுகிறது.
நூறு கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியாவில் ஏறக்குறைய 50 கோடிப் பேர் பெண்கள்







All the contents on this site are copyrighted ©.