2011-07-09 15:52:43

திருச்சபை பற்றிய புள்ளி விபரங்கள் கொண்ட Atlas Hierarchicus திருத்தந்தையிடம் கொடுக்கப்பட்டது


ஜூலை09,2011. கத்தோலிக்கத் திருச்சபையின் புள்ளி விபரங்கள் குறித்த வரைபடங்கள் மற்றும் தகவல்களைக் கொண்ட Atlas Hierarchicus என்ற புத்தகம் திருத்தந்தை 16ம் பெனடிக்டிடம் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர் பெர்னாண்டோ ஃபிலோனி சமர்ப்பித்தார்.
Atlas Hierarchicus என்ற இந்தப் புத்தகத்தை உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது, அதற்குத் திருத்தந்தையும் முன்னுரை எழுதியுள்ளார்.
திருச்சபையில் அண்மை ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட மறைமாவட்டங்கள் பற்றிய விபரங்கள் உட்பட உலகின் ஐந்து கண்டங்களிலுள்ள திருச்சபை பற்றிய அனைத்துப் புள்ளி விபரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த அட்லஸின் முந்தைய பிரதி 1992ல் வெளியிடப்பட்டது. இது முதன் முதலாக 1913ல் இறைவார்த்தை சபையின் Karl Streit என்ற டச்சு நாட்டுத் துறவியால் தயாரிக்கப்பட்டது. இவர் இதன் முதல் பிரதியை பாப்பிறை பத்தாம் பத்திநாதரிடம் கொடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.