2011-07-08 16:24:58

திருப்பீடமும் அஜர்பைஜானும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன


ஜூலை08,2011. மத்திய ஆசிய நாடான அஜர்பைஜானும் திருப்பீடமும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிற நாடுகளிலும் உடன்பாடுகள் ஏற்படுவதற்கு இது ஒரு முன்மாதிரிகைச் சட்டமாக அமையக்கூடும் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அஜர்பைஜான் குடியரசிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபை சட்டரீதியாகப் பாதுகாப்பைப் பெறும் எனவும் சமய சுதந்திரத்திற்கும் உறுதி வழங்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.
யுரேசியாவின் கவ்காசுஸ் பகுதியில் பெரிய நாடாக இருக்கும் அஜர்பைஜானுக்கு வடக்கே இரஷ்யாவும் தெற்கே ஈரானும் எல்லைகளாக அமைந்துள்ளன. 1991ல் முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து சுதந்திரமடைந்தது. அஜர்பைஜான் குடியரசு அதிகாரப்பூர்வமாக சமயச்சார்பற்றதாக இருந்தாலும் அந்நாட்டின் 99 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். சுமார் 400 பேரே கத்தோலிக்கர்.
தற்போது அஜர்பைஜானில் கத்தோலிக்கர் நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.