2011-07-08 16:08:11

ஜூலை 09. வாழ்ந்தவர் வழியில் ....


முதுபெரும் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சி. ஆர். கண்ணன், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் பிறந்தவர். அபர்ணா நாயுடு என்ற புனைப்பெயரில் பல தொடர்கதைகள், மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
முறையாக நடனம் பயின்று, திரைப்படத் துறையின் மூலம் கலையுலக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தினமணிக் கதிரில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பத்திரிகையாளராக மாறியவர்.
"அபர்ணா நாயுடு"என்ற பெயரில் இவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் தொடர் கதைகள், தினமணிக் கதிர், கல்கி, சாவி, குங்குமம் மற்றும் பல முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.
இவரது கதையான "பகடை பன்னிரண்டு" திரைப்படமாக முன்னணிக் கலைஞர்கள் நடிப்பில் வெளி வந்தது.
இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் "தற்கால ஜெர்மானிய சிறுகதைகள்" என்ற தொகுப்பாக வெளிவந்தன.
சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த கண்ணன், சென்னை பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில் 2009ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி காலை தன் 79ம் வயதில் உயிரிழந்தார்.








All the contents on this site are copyrighted ©.