2011-07-08 16:26:03

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் இலத்தீன் அமெரிக்க மேய்ப்புப்பணிகளுக்கு 21 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட நிதியுதவி


ஜூலை08,2011. இலத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகளில் இடம் பெறும் மேய்ப்புப்பணிகளில் 86 திட்டங்களுக்கு உதவுவதற்கென, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இலத்தீன் அமெரிக்காவுக்கான ஆணையம் 21 இலட்சம் டாலருக்கு மேற்பட்ட நிதியுதவிக்கு இசைவு தெரிவித்துள்ளது.
இந்நிதியுதவி குறித்துப் பேசிய இவ்வாணையத் தலைவர் பேராயர் ஹோசே கோமஸ், 2010ல் நிலநடுக்கங்களால் பாதிக்கப்ட்ட ஹெய்ட்டி மற்றும் சிலே நாடுகளுக்கு அதிக உதவிகளைச் செய்து வருவதாகக் கூறினார்.
கோப்ரே பிறரன்பு அன்னை கியூபாவின் பாதுகாவலியாக அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கும் அந்நாட்டின் நற்செய்திப்பணிக்கும் சிறப்பாக நிதியுதவி ஒதுக்கப்பட்டதாக பேராயர் அறிவித்தார்.
எல் சால்வதோர், அர்ஜெண்டினா, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளுக்கும் இவ்வுதவிகள் வழங்கப்படுகின்றன என்றார் லாஸ் ஆஞ்சலீஸ் பேராயர் கோமஸ்







All the contents on this site are copyrighted ©.