2011-07-07 15:32:52

கிழக்கு ஆப்ரிக்காவின் உணவு நெருக்கடியைக் களைய உடனடி உதவிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது CAFOD அமைப்பு


ஜூலை 07, 2011. கிழக்கு ஆப்ரிக்காவில் மழையும் தானிய உற்பத்தியும் குறைந்து, கால்நடைகள் பெருமளவில் உயிரிழந்து, மக்கள் உணவு தேடி பல நூறு மைல்கள் அலையும் இன்றைய நிலைகளை மாற்ற உடனடி உதவிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது கத்தோலிக்க உதவி நிறுவனமான CAFOD அமைப்பு.
காலம் கடந்து போவதற்கு முன்னர் உதவிகள் வழங்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள இப்பிறரன்பு அமைப்பு, ஏற்கனவே, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான உணவு மையங்கள் அமைத்தல், கிணறு வெட்டுதல், நீர் சேமிப்பு, வறட்சியையும் தாண்டி பலன் கொடுக்கும் பயிர்களுக்கான விதைகளை வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறது.
இதற்கிடையே, உணவு நெருக்கடியால் பல இலட்சக்கணக்கான ஆப்ரிக்கர்கள் துன்புறும் இவ்வேளையில், உலகிலுள்ள அனைத்து நல்மனதுடையோரின் கவனத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் தென் கென்ய ஆயர் பீட்டர் கிஹாரா.








All the contents on this site are copyrighted ©.