2011-07-07 15:33:44

ஏழை நாடுகளுக்கான ஆஸ்திரேலிய அரசின் பொருளாதார உதவிகள் குறித்து பாராட்டியுள்ளது காரித்தாஸ் அமைப்பு


ஜூலை 07, 2011. ஏழை நாடுகளுக்கான ஆஸ்திரேலிய அரசின் பொருளாதார உதவிகள் குறித்து தனிசுதந்திர அமைப்பு ஒன்று முன்வைத்துள்ள பரிந்துரைகளை ஆஸ்திரேலிய அரசு ஏற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.
கடந்த பதினைந்து ஆண்டுகால வெளிநாட்டு உதவிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஏற்றுள்ளதன் மூலம், உதவிகள் குறித்த வெளிப்படையான பொறுப்பான நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளார் என்றார் காரித்தாஸ் ஆஸ்திரேலியாவின் உயர் அதிகாரி Jack de Groot.
வெளிநாடுகளின் ஏழைகளுக்கான உதவிகள் அவர்களையேச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த ஆய்வுகள் உதவும் என்ற அவர், நலஆதரவு, கல்வி, வாழ்க்கைத்தரம், நீதி மற்றும் அவசரகால உதவிகளுக்கு தற்போது முன்னுரிமைக் கொடுக்கப்படுவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.