2011-07-06 15:50:10

கொலம்பியாவில் புரட்சிக் குழுக்களுடன் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை தயாராகவுள்ளது


ஜூலை06,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளில் அரசுக்கும் கெரில்லாக் குழுக்களுக்குமிடையே நடுநிலை வகி்ப்பதற்கு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை முன்வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலம்பியாவின் FARC புரட்சிக்குழுத் தலைவர் Cano எனப்படும் Guillermo Leon Sanchez Vargas ஐ பிடிப்பதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, அத்தலைவர் அதிகாரிகளிடம் சரணடையுமாறு கொலம்பிய ஆயர் பேரவைச் செயலர் ஆயர் ஹூவான் விசென்த்தே கோர்தோபா அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த நீண்டகாலக் கெரில்லாப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் அரசுக்கும் கெரில்லாக் குழுக்களுக்குமிடையே நடுநிலை வகி்ப்பதற்கும் ஆயர் முன்வந்துள்ளார்.
கொலம்பியாவில் ஏறக்குறைய அரை நூற்றாண்டாக இடம் பெற்று வரும் இந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருவதற்கு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ரூபன் சலசாரும் அழைப்பு விடுத்துள்ளார்.
கொலம்பியாவில் இடம் பெற்று வரும் இந்தக் கெரில்லாப் போர் இலத்தீன் அமெரிக்காவிலே நீண்டகாலமாக இடம் பெற்று வரும் போர் என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.