2011-07-05 16:26:54

கேரள அரசுக்கு உலக வங்கி 20 கோடி டாலர் கடனுதவி


ஜூலை05,2011. கேரளாவில் உள்ளாட்சித்துறை புறநகர் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உலகவங்கி இருபது கோடி டாலர் கடனுதவி அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் உலகவங்கி மற்றும் இந்தியா இடையே இத்திங்களன்று கையெழுத்தானது.
கேரள மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு உள்ளாட்சித்துறையில் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தம் என்ற கொள்கையின்படி மாநிலத்தில் புறநகர், நகர்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறைகள் ஆகியவற்றின் உள்கட்டமைப்பு திட்டங்களை வலுப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. இதன் துவக்கமாக உலகவங்கியிடம் கடனுதவி கேட்டிருந்தது. இதன்படி கேரள அரசுக்கு உலகவங்கி 20 கோடி டாலர் கடனுதவி அளிக்க முன்வந்துள்ளது. 0.75 சதவீத வட்டியுடன், 30 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் உத்தரவாதத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான நிதித்துறை அமைச்சக இணைச்செயலாளர் வேணு ராஜாமணி, கேரள அரசின் உள்ளாட்சித்துறை முதன்மை செயலர் ஜேம்ஸ்வர்க்கீஸ், உலகவங்கி ஆட்சிமன்ற குழுவின் இந்தியாவிற்கான ஆலோசகர் ரோலாண்ட் லூம் ஆகியோரிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.







All the contents on this site are copyrighted ©.