2011-07-04 16:33:56

உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் திருத்தந்தையின் பணிகளுக்கென கர்தினால்களின் பங்களிப்பு


ஜூலை 04, 2011. உரோம் நகரின் ஏழைகளுக்கு உதவும் பணிகளுக்கானத் தங்கள் பங்களிப்பாக 72,000 டாலர்களை, திருத்தந்தையின் 60வது குருத்துவ விழாவை முன்னிட்டு திருத்தந்தையிடம் வழங்கினர் கர்தினால்கள்.
கடந்த புதனன்று புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவன்று சிறப்பிக்கப்பட்ட திருத்தந்தையின் 60வது குருத்துவ திருநிலைப்பாட்டை ஒட்டி வெள்ளியன்று திருத்தந்தையுடன் இணைந்து மதிய உணவருந்திய கர்தினால்கள், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கானத் தங்கள் பங்களிப்பாக இத்தொகையை அளித்தனர்.
உரோம் நகரின் ஏழைகளுக்காகவும், அந்நகரில் வாழும் குடியேற்றதாரர்கள் மற்றும் அகதிகளிடையேயானப் பணிகளுக்கெனவும் இதனைத் திருத்தந்தையிடம் வழங்குவதாக அறிவித்தார் கர்தினால்கள் அவையின் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.
புனித பேதுரு விழாவன்று கர்தினால்கள் அவை, உரோம் நகரின் 200 ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கியதையும் குறிப்பிட்டார் கர்தினால் சொதானோ. உரோம் நகரிலும் ஏழ்மை அதிகரித்து வரும் இன்றையச் சூழலில், எக்காலத்தையும் விட தற்போது திருச்சபை, பிறரன்பின் திருச்சபையாக வாழ ஆவல் கொள்கிறது என மேலும் உரைத்தார் கர்தினால்







All the contents on this site are copyrighted ©.