2011-07-02 15:20:49

நற்செய்தி அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு


ஜூலை02,2011. கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர்தல் மற்றும் தொடக்ககாலத் திருச்சபையை மையமாக வைத்து நற்செய்தி அறிவிப்புக்கான வழிகாட்டி விதிமுறைகள் குறித்த உடன்பாட்டிற்குக் உலகக் கிறிஸ்தவத் தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவை, உலகக் கிறிஸ்தவ சபைகள் மன்றம், உலக லூத்தரன் கூட்டமைப்பு ஆகியவைகள் இணைந்து, “பலசமயங்கள் கொண்ட உலகில் கிறிஸ்தவ சாட்சியம்” என்ற தலைப்பில் இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் இவ்விசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாற்பதுக்கும் மேற்பட்ட வல்லுனர்கள் ஐந்து ஆண்டுகள் செய்த பணியின் பயனாக இவ்வறிக்கை வெளிவந்துள்ளது.
உலகில் கிறிஸ்தவர்கள் சாட்சியாக வாழும் முறைகள் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று பெரிய அவைகளில் கத்தோலிக்க, ஆங்லிக்கன், ஆர்த்தடாக்ஸ், பிரிந்த கிறிஸ்தவ சபை, இவாஞ்சலிக்கல், பெந்தகோஸ்து, இன்னும் பிற தனிப்பட்ட சபைகள் உறுப்பினர்களாக உள்ளன. இவற்றில் உலகின் சுமார் 200 கோடிப்பேர் அதாவது உலகக் கிறிஸ்தவர்களில் சுமார் 90 விழுக்காட்டினர் உறுப்பினர்களாக உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.