2011-07-01 15:42:43

உலகில் சிறந்த 10 போராட்டங்கள் பட்டியலில் உப்பு சத்தியாகிரகம்


ஜூலை01,2011. உலக நாடுகளில், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய பத்து போராட்டங்களில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் இடம் பெற்றுள்ளது
அமெரிக்காவின், "டைம்ஸ்' பத்திரிகை, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய பத்துப் போராட்டங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில், சுதந்திரப் போராட்டக் காலத்தின் போது, அதாவது, 1930ம் ஆண்டு மார்ச்சில், குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகிலுள்ள, சபர்மதி ஆசிரமத்திலிருந்து, சிறிய கிராமமான தண்டிக்கு மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டார். இது தண்டி யாத்திரை என அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக, வன்முறையற்ற முறையில், காந்தியால் நடத்தப்பட்ட இந்தத் தண்டி யாத்திரை மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. இது குறித்து, "டைம்ஸ்' தெரிவித்துள்ள செய்தியில், "சத்யாகிரகா என்றால், "உண்மையான படை' என்று பொருள். பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை உடைக்க உப்பு சத்தியாகிரகம் உதவியது. இந்த வன்முறையற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எண்பதாயிரம் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்' எனத் தெரிவித்துள்ளது







All the contents on this site are copyrighted ©.