2011-07-01 15:40:41

இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்டவர் குறித்த விவரங்களை ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ளது


ஜூலை01, 2011. 1988க்கும் 2011க்கும் இடைப்பட்டக் காலத்தில் மிகக்கொடுமையான முறையில் இலங்கை காவல்துறையால் சித்ரவதைப்படுத்தப்பட்ட 323 பேர் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது ஆசிய மனித உரிமைகள் அமைப்பு.
இலங்கை காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்த 1500 சம்பவங்களைத் திரட்டியுள்ள ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அவை, மனம்போன போக்கில் மக்களைக் கைது செய்துள்ள காவல்துறை, அவர்கள் செய்யாதக் குற்றத்தை அவர்களைக் கொடுமைப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துள்ளதாகவும் குற்றங்சாட்டுகிறது.
எவ்விதத் தண்டனைப் பயமும் இன்றி இலங்கை காவல்துறைச் செயல்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் இம்மனித உரிமைகள் அவையின் இலங்கை இயக்குனர் பேசில் ஃபெர்னாண்டோ. கிறிஸ்தவப் படிப்பினைகளின் பின்னணியில் இது குறித்து வெளிப்படையாகப் பேசி, இத்தகைய உரிமை மீறல்களை இலங்கையிலிருந்து அகற்ற உதவுவது தலத்திருச்சபையின் கடமை என்றார் உரிமை நடவடிக்கையாளர் அருட்பணி சரத் இட்டமல்கோடா







All the contents on this site are copyrighted ©.