2011-06-30 16:06:52

உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் - திருப்பீட உயர் அதிகாரி


ஜூன் 30,2011. இயற்கைப் பேரிடர்கள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கக்கூடும் ஆனால் உலகில் பசியால் வாடும் சுமார் நூறு கோடிப் பேரைப் பசியால் துன்புறாமல் வைக்க முடியும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
FAO எனும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் உரோமையில் நடத்தி வரும் 37 வது அமர்வில் கலந்து கொள்ளும் FAO வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் லூயிஜி த்ரவலினோ இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
2015ம் ஆண்டுக்குள் உலகின் ஏழ்மையைப் பாதியாகக் குறைப்பதற்கு FAO முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் இதற்கு அனைத்து நாடுகளும் பொது மக்கள் சமுதாயமும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த இலக்கை அடைய இயலும் என்றார் அவர்.
FAOவில் இடம் பெறும் கூட்டமானது இச்சனிக்கிழமை நிறைவடையும். இந்த ஐ.நா. நிறுவனத்தில் திருப்பீடம் 1948ம் ஆண்டிலிருந்து நிரந்தரப் பார்வையாளராக இருந்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.