2011-06-29 15:31:13

கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் இஸ்பெயின் ஆயர்கள் கண்டனம்


ஜூன்29,2011. இஸ்பெயின் நாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கருணைக்கொலை குறித்த மசோதாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, அம்மசோதாவின் தற்போதைய கூறுகள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று இஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“மாண்புச் சட்டத்துடன்கூடிய மரணம்” என்ற தலைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இம்மசோதா குறித்து கருத்து தெரிவித்த இஸ்பெயின் ஆயர்கள், மனிதர் வாழ்வதற்கான உரிமையை சகித்துக் கொள்ளும் அல்லது அதனை மீறும் சட்டங்கள் அநீதியானவை, எனவே இவற்றுக்கு மக்கள் பணிந்து நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்தச் சட்டங்கள் அனைத்துச் சனநாயக வழிகளிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று இவ்வாரத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேசமயம் மக்களின் மனச்சான்றின் உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்பெயின் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.