2011-06-28 16:35:19

ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதிக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க நிக்கரகுவா தலத்திருச்சபை அழைப்பு


ஜூன் 28, 2011. நிக்கரகுவா நாட்டில் வரும் நவம்பரில் தேர்தல்கள் இடம்பெற உள்ள நிலையில், ஜூலை முதல் தேதியை நாட்டின் அமைதி மற்றும் நிலையான தன்மைக்கான செபம் மற்றும் உண்ணாநோன்பின் நாளாகச் சிறப்பிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் Leopoldo Brenes Solorzano. தேர்தலை ஒரு போர்க்களமாக மாற்றாமல் இருக்க இப்போதிருந்தே வன்முறைகளையும் தீவிரவாதங்களையும் மக்கள் கைவிட்டு, அமைதியின் பாதையில் இப்போதே நடைபோட பழக வேண்டும் என அழைப்பு விடுத்தார் மனகுவா பேராயர்.
ஏனைய பல நாடுகளில் இடம்பெறுவதுபோல் நிக்கரகுவாவிலும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்கப்பட்டு அமர்த்தப்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர் Brenes Solorzano, இது அமைதிக்கும் நிலையானத்தன்மைக்கும், ஒரு வெளிப்படையானப் போக்கிற்கும் சிறப்புப் பங்காற்றுவதாக இருக்கும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.