2011-06-28 16:31:45

அனைத்து வத்திக்கான் செய்திகளும் ஒரே இணையதளத்தில்


ஜூன் 28, 2011. பன்வலை தொடர்புசாதனத்தின் ஒரே இணையதளத்தில் பல்வேறு கத்தோலிக்கத் தளங்களின் செய்திகளை ஒன்றிணைத்துத் தரும் வகையில் புதிய சேவையை இப்புதன் முதல் துவக்குகிறது திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவை.
திருத்தந்தையின் 60ம் ஆண்டு குருத்துவ விழாவும் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் திருவிழாவுமான இப்புதனன்று திருத்தந்தையால் துவக்கி வைக்கப்படவுள்ள இந்தப் புதிய இணையதளம், 'லொசொர்வாத்தோரே ரொமானோ', வத்திக்கான் வானொலி, Fides செய்தி நிறுவனம் ஆகியவைகளை ஒன்றிணைத்துச் செய்திகளை வழங்குவதாக இருக்கும்.
www.news.va என்ற பெயருடன் இப்புதன் முதல் செயல்படும் இந்த இணையதளம் முதலில் இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களைக் கொண்டிருக்கும்.








All the contents on this site are copyrighted ©.