2011-06-28 16:27:12

Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்தார் திருத்தந்தை


ஜூன் 28, 2011. புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உரோம் நகர் வந்திருந்த Ecumenical கிறிஸ்தவ சபை பிதாப்பிதாவின் பிரதிநிதிகள் குழுவை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்து அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.தான் உயிர்த்தபின் சீடர்களை சந்தித்த இயேசு, மீட்பு நற்செய்தியின் சாட்சிகளாக இருக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சீடர்கள் பலர் மறைசாட்சியாக உயிரிழந்தனர் என்ற திருத்தந்தை, உரோமையில் கொல்லப்பட்ட் புனிதர்கள் பேதுரு மற்றும் பவுலின் கல்லறைகள் விசுவாசிகளின் வணக்கத்துக்குரியதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். கத்தோலிக்கத் திருச்சபைக்கும் Ecumenical கிறிஸ்தவ சபைக்கும் இடையே இடம்பெற்றுவரும் இறையியல் பேச்சுவார்த்தைகள் ஆய்வு, சிந்தனை மற்றும் மனம் திறந்த செயல்பாட்டிற்கான அர்ப்பணத்துக்கு அழைப்பு விடுப்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார். வன்முறை, பாராமுகம், சுயநலப்போக்கு போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய உலகில், நற்செய்தி உண்மைக்கான கிறிஸ்தவ சபைகளின் ஒன்றிணைந்த சாட்சியம் மூலமே, மக்கள் உண்மையின் பாதையை கண்டுகொள்ள நாம் உதவ முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.