2011-06-27 15:41:32

ஜூன் 28 வாழ்ந்தவர் வழியில் .....


வங்காளதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் முகமது யூனுஸ் (Muhammad Yunus) என்பவர் வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். இவர் சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர். சிறுகடன் என்பது, ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக் கடனாகும். முகமது யூனுஸ் கிராமின் வங்கியின் (Grameen Bank) தோற்றுவிப்பாளரும் 'Banker to the Poor' எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நொபெல் அமைதி விருது இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது, இந்தியாவின் காந்தி அமைதி விருது, அன்னை தெரசா விருது உட்பட பல பன்னாட்டு மற்றும் தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார். இந்தக் கிராமின் வங்கி 510 கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டாலரை 53 இலட்சத்துக்கு அதிகமான மக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது. இவ்வங்கியில் சிறுகடன் பெறுபவர்களில் 96 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் முகமது யூனுஸ், 1940 ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி வங்காளதேசத்தின் சிட்டகாங்கில் பிறந்தார்.







All the contents on this site are copyrighted ©.