2011-06-24 15:27:55

மத்தியக்கிழக்கு நாடுகளில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் ஏற்படுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்குப்படுமாறு திருத்தந்தை அழைப்பு டுமாறு திருத்தந்தை அழைப்பு


ஜூன்24,2011. மத்தியகிழக்கு நாடுகளில் வன்முறை ஒழிக்கப்பட்டு சமூக நல்லிணக்கமும் அமைதியான ஒருங்கிணைந்த வாழ்வும் ஏற்படுவதற்குத் தேவையான எல்லாவகையான முயற்சிகளும் எடுக்கப்படுமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கீழைரீதி திருச்சபைகளுக்கு உதவுவதற்கானக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 80 பிரதிநிதிகளை இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, வட ஆப்ரிக்க நாடுகளிலும் மத்தியக்கிழக்குப் பகுதிகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியக் கருத்துப் பரிமாற்றங்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
இந்த நாடுகளின் தற்போதைய நிலைமை உலகெங்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும், இந்நாடுகளில் துன்புறும் மக்களோடு தான் ஆன்மீக ரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று தான் தனது 60வது குருத்துவத் திருநிலைப்பாட்டு நாளை நினைவுகூருவதாகவும், அந்நாளில் நல்ல ஆயராம் கிறிஸ்துவுக்குத் தான் நன்றி சொல்வதாகவும், இந்நாளை முன்னிட்டுத் தனக்காகச் செபிக்கும் மற்றும் தனக்கு வாழ்த்துக் கூறும் அனைவரையும் நன்றியோடு நினைவுகூருவதாகவும் கூறினார் திருத்தந்தை. மேலும், அந்நாளில் திருச்சபைக்கும் உலகுக்கும் எண்ணற்ற ஆர்வமுள்ள நற்செய்திப் பணியாளர்களைக் கொடுக்குமாறு அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவேன். என்னோடு சேர்ந்து நீங்களும் செபியுங்கள் என்றும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.