2011-06-21 15:53:11

நைஜீரியாவின் பதட்டநிலைகளுக்கு சமூக அநீதிகளே காரணம்


ஜூன் 21, 2011. நைஜீரியாவில் இன்று இடம்பெறும் பதட்டநிலைகளுக்கான முக்கிய காரணம், கிறிஸ்தவ இஸ்லாம் முரண்பாடு அல்ல, மாறாக, பணக்கார மற்றும் ஏழைகளிடையேயான மிகப்பெரும் இடைவெளியே என்றார் அந்நாட்டுப் பேராயர் John Onaiyekan.
நைஜீரியாவின் அமைதிக்கான ஆபத்து மதங்களிடையேயான முரண்பாடுகள் அல்ல, மாறாக அந்நாட்டில் நிலவிவரும் சமூக அநீதியேயாகும் என்ற அபுஜா பேராயர் Onaiyekan, கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே புரிந்து கொள்ளுதலையும் பேச்சுவார்த்தைகளையும் வளர்க்க தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
மதங்களிடையேயான முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் குறித்து செய்தி வழங்கும் சமூகத்தொடர்பாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் பேராயர்.








All the contents on this site are copyrighted ©.