2011-06-20 16:20:02

இலங்கை கிழக்கு மாநில விதவைகளுக்கு இந்திய அரசு உதவி


ஜூன் 20, 2011. இலங்கை கிழக்கு மாநிலத்தில் யுத்தத்தினால் விதவைகளானவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்திய அரசினால் முதற் கட்டமாக 20 கோடியே 30 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக கிடைத்துள்ளதாக இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார துணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் யுத்த விதவைகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் "சேவா இந்தியா " அமைப்பின் மூலமாக இந்த உதவி நடைமுறைப்படுத்தப்பட விருப்பதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கென 50 இளையோர், பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டு அடுத்த வாரம் "சேவா இந்தியா" அமைப்பின் மூலமாக பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும், அவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் 800 இளம் விதவைகளுக்கு அவர்கள் மூலமாக சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் வாயப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார் துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.








All the contents on this site are copyrighted ©.