2011-06-14 15:44:28

மக்கள் பிறப்பு விகிதம் குறைந்துள்ள போதிலும், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தென் கொரிய ஆயர் பேரவை மகிழ்ச்சி


ஜூன் 14,2011. தென் கொரியாவில் மக்கள் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்ற போதிலும், மொத்தத்தில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருவதாக அந்நாட்டு ஆயர் பேரவை மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
தென் கொரியாவில் அண்மைக் காலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதாக கவலையை வெளியிட்ட ஆயர்கள், இருந்தபோதிலும், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு 1.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கடந்த பத்தாண்டுகளின் தென் கொரியாவில் 9 இலட்சத்து 80 ஆயிரம் பேர் திருமுழுக்கு பெற்றுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய பத்தாண்டுகளை விட 23 விழுக்காடு அதிகம் எனவும் தென் கோரிய ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
தென் கொரியாவின் மொத்த மக்கள் தொகையில் 10.1 விழுக்காட்டினரே கத்தோலிக்கர்.








All the contents on this site are copyrighted ©.